சந்தையில் தற்போது மரக்கறிகளின் விலைகள் சடுதியாக உயர்வடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.அதன்படி, மரக்கறிகள் அனைத்தும் ஒரு கிலோ கிராம் 400 ரூபாவுக்கும் அதற்கும் மேலதிகமாகவும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

விவசாயிகளுக்குத் தேவையான இரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் விவசாய இரசாயனங்கள் இன்மையே மரக்கறி விளைச்சல் வீழ்ச்சிக்கு முக்கியக் காரணம் என அகில இலங்கை கூட்டுப் பொருளாதார மத்திய நிலையங்களின் தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

கடந்த பருவத்தில் விவசாயிகள் இரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் விவசாய இரசாயனங்களை வைத்திருந்ததாகவும், தற்போது அந்த இருப்புக்கள் குறைவடைந்துள்ளதால் மரக்கறிச் செய்கை பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஹெட்டியாராச்சி மேலும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.