பண்டாரகம, அட்டுலுகம பிரதேசத்தில் மிகக் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சிறுமி ஆயிஷா அக்ரம் அவர்களை கொலை செய்த இருபத்தி ஒன்பது வயது இளைஞனுக்கு கடூழிய ஆயுள் தண்டனை வழங்கவேண்டுமென ஸ்ரீலங்கா ஐக்கிய முன்னணி கட்சியின் தேசியத் தலைவர் சித்திக் முஹம்மத் சதிக் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில் கடந்த 27ஆம் திகதி பண்டாரகம, அட்டுலுகம பிரதேசத்தில் கடைத்தெருவுக்கு கோழி இறைச்சி வாங்க சென்ற சிறுமியை அதே பிரதேசத்தில் உள்ள இருபத்தி ஒன்பது வயது நிரம்பிய இளைஞன் ஒருவர் கொலை செய்து சிறுமியின் வீட்டுக்கு முன்னால் உள்ள காடுகள் அடர்ந்த சதுப்பு நிலத்தில் மறைத்து வைத்திருந்தார்.
குற்றப்புலனாய்வு பிரிவினரின் சந்தேகத்துக்கு அமைய பொதுமக்களின் உதவியுடன் அந்த சதுப்பு நிலத்தில் இருந்து சிறுமியின் சடலம் பெறப்பட்டு மரண பரிசோதனை செய்து சிறுமியை கொண்ட நபர் குற்றத்தை ஒப்புக் கொண்டார்.
இவ்வாறான கொலை செய்த இந்த நபருக்கு இந்த நாட்டின் ஜனாதிபதி அவர்களும் பிரதமர் அவர்களும் இவருக்கு ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் என்றும் இதற்கு முன்னர் நாட்டில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெற்று இருந்தால் அது சம்பந்தமான அத்தனை வழக்குகளையும் மேல விசாரணை செய்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கண்டுபிடித்து அவர்களுக்கும் ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் இதுவரையில் நாட்டில் இவ்வாறான சம்பவங்களில் கொலை செய்யப்பட்ட சிறுவர்கள் குழந்தைகள் இளைஞர்கள் யுவதிகள் போன்றவர்களுக்கு நீதியை அரசாங்கம் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று பொது மக்களின் பிரச்சினைக்கு குரல் கொடுக்கும் கட்சி என்ற வகையில் வேண்டுகோள் விடுக்கின்றேன்.
நிச்சயமாக இந்த மிலேச்சத்தனமான சம்பவங்களுக்கு கருவ ஜனாதிபதி அவர்களும் பிரதமர் அவர்களும் நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறோம்.
தலைவர் சித்திக் முஹம்மத் சதிக் ஸ்ரீலங்கா ஐக்கிய முன்னணி கட்சி