இந்திய மக்கள் அன்பளிப்புச் செய்த பொருட்களை இலங்கையில் உள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக உணவு ஆணையாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மாவட்டச் செயலகங்கள் ஊடாக அரிசி, பால்மா என்பன பகிர்ந்தளிக்கப்படும்.

இரண்டு பில்லியன் இந்திய ரூபா பெறுமதியான அரிசி, பால்மா மற்றும் மருந்துகளை இந்தியா இலங்கைக்கு அன்பளிப்புச் செய்துள்ளது.

ஒரு குடும்பத்திற்கு 10 கிலோ அரிசி வழங்கப்படும். இதேவேளை, இந்தியா அன்பளிப்புச் செய்த 260 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துகள் மற்றும் ஏனைய மருத்துவ உபகரணங்கள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் நேற்று (27) கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அரசாங்க தகவல் திணைக்களம்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.