நிட்டம்புவ நகரில் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்ட எம்பி பலி!

Rihmy Hakeem
By -
0

 




Update:

நிட்டம்புவ நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஆளும் கட்சியின் பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முன்னைய செய்தி :

சற்று முன் நிட்டம்புவ நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும், நிட்டம்புவ நகரினூடாக வாகனத்தில் வருகை தந்த ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொலன்னறுவை மாவட்ட எம்பி  அமரகீர்த்தி அதுகோரலவின் வாகனத்தின் மீது பொதுமக்கள் தாக்குதல் நடாத்தியுள்ளதாக தெரியவருகிறது.

இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினரால் பொது மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதுடன், அதனை தொடர்ந்து அவரும் ஆதரவாளர் ஒருவரும் நிஹால் சூப்பர் மார்க்கெட் கட்டிடத்தை நோக்கி தப்பிச்சென்று தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை முயற்சி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

பாராளுமன்ற உறுப்பினரின் மற்றுமொரு ஆதரவாளர் பொதுமக்களால் பிடிக்கப்பட்டதுடன், பொதுமக்கள் சார்பில் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நிட்டம்புவ நகரில் தற்போது அமைதியின்மை நிலவி வருவதனால் அங்கு இருப்பவர்கள் விரைவாக வெளியேறுமாறும் அங்கு எவரும் செல்ல வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். (Siyane News)





கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)