தொடர்ச்சியாக பெய்து வரும் பலத்த மழை காரணமாக 04 ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. 

களு, ஜின், நில்வளா மற்றும் அத்தனகல்ல ஓயா ஆகிய ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதன் காரணமாக அவற்றை அண்டிய பிரதேசங்களில் வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

களு கங்கை - மில்லகந்த பிரதேசம் மற்றும் நில்வலா கங்கை - பாணதுகம பிரதேசம் என்பவற்றில் சிறு வெள்ள மட்டம் வரை உயர்ந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அத்தனகல்ல ஓயாவின் நீர்மட்டம் சிறு வெள்ள மட்டத்தை அண்மித்துள்ளதாக அத்தனகல்ல பிரதேச செயலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. (Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.