பா.நிரோஸ்

ராஜபக்‌ஷர்களை காப்பாற்றவே நான் பிரதமர் பதவியை எடுத்தேன் என வெளிப்படையாக விமர்சிக்கின்றனர். நாட்டை பாதுகாப்பதற்காகவே நான் பிரதமராகியிருக்கிறேன்,  என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 

பாராளுமன்றத்தின் நேற்றைய (18) அமர்வில் கலந்துகொண்டு மரிக்கார் எம்.பியின் கேள்விக்குப் பதிலளித்து உரையாற்றும்போதே ரணில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பிரதி சபாநாயகராக பெண் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை நியமிக்கப்பட வேண்டுமென நான் கூறியதை ஏற்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ ரோஹினி கவிரத்னவின் பெயரை முன்மொழிந்திருந்தார். இரண்டு வருடங்களுக்கு பின்னர் எனது யோசனையை சஜித் ஏற்றுக்கொண்டுள்ளார் இதற்காக நான் அவருக்கு நன்றிகளை தெரிவிக்கிறேன். 

இதேபோல் ஆளுங்கட்சியினரும் எனது யோசனைகளை கேட்பார்கள். அதற்கு ஒரு வாரம் தேவை. அந்த ஒருவாரத்தைத் தாருங்கள் ஆளுங்கட்சியினரையும் சரி செய்கிறேன் எனவும் ரணில் தெரிவித்தார்.

நாட்டை நான் விற்றுவிட்டதாக 2018ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் மஹிந்த கூறினார். 2020ஆம் ஆண்டு தற்போதைய எதிர்க்கட்சியினரும் அதனையே கூறினார்கள். எனவே நான் இரு பக்கங்களிலும் எவரையும் பாதுகாக்கப்போவதில்லை  சட்டரீதியாகவே நான் செயற்படுவேன் என்றார்



கருத்துரையிடுக

Blogger இயக்குவது.