நாட்டிற்கு கஷ்டமான காலமாக எதிர்வரும் சில வாரங்கள் இருக்கும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நட்பு நாடுகள் பலவற்றின் தூதுவர்கள் மற்றும் அதிகாரிகள் பலருடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர்களிடமிருந்து சாதமான பதில் கிடைத்துள்ளதாகவும் நாட்டின் தற்போதைய நிலை குறித்து குறித்த நாடுகளுடன் மேலும் பேச்சுவார்த்தை நடாத்தி உரிய ஒப்பந்தங்களுக்கு செல்ல முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். (Siyane News)