அட்டுலுகம சிறுமி ஆயிஷா படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் விசாரணைக்காக பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

குறித்த நபரின் உடலின் பல பாகங்களில் நகக் கீறல்கள் காணப்பட்டதாகவும், சந்தேகநபரின் வீட்டின் படுக்கைக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், சேறும் சகதியுமான சாரம் ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சிறுமி காணாமல் போன தினமான காலை 10.15 மணியளவில் சிறுமி பயணித்த வீதியில் சந்தேகத்துக்கு இடமான முறையில் அந்நபர் இருந்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர், ஆயிஷாவும் அவரது தாயும் வீட்டில் தனியாக இருந்த போது, இரவுவேளையில் வீட்டுக்குள் புகுந்து பாலியல்  பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்தமை தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

Tamil Mirror 

Update:

இதேவேளை சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மற்றுமொருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.