நாட்டில் எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் மீன், இறைச்சி, முட்டை ஆகியவற்றின் விலையும் மேலும் உயர்வடையும் நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது.

எதிர்வரும் நாட்களில் முட்டை ஒன்றின் விலை 38 அல்லது 40 ரூபாவாக அதிகரிக்கப்படுமென அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் சரத் அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

மீண்டும் அதிகரிக்கப்படும் அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலை

எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் கோழி தீவனத்தின் விலை அதிகரிப்பு காரணமாக இன்று ஒரு முட்டையின் உற்பத்தி செலவு மட்டும் 31 ரூபாயாக அதிகரித்துள்ளது.

கோழி தீவன விலை உயர்வால் சிறு கோழி வியாபாரிகள் பலர் தொழிலை விட்டு வெளியேறியுள்ளனர்.

மீண்டும் அதிகரிக்கப்படும் அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலை

65 முதல் 70 ரூபாய் வரை விற்கப்பட்ட ஒரு கிலோ உணவு பொதி விலை 220 ரூபாயாக அதிகரித்துள்ளது. எரிபொருள் விலை உயரும்போது இது மேலும் அதிகரிக்கும்.

விவசாயி இந்த தொழிலில் நிலைத்திருக்க வேண்டுமானால், ஒரு முட்டையை குறைந்தபட்சம் 38 அல்லது 40 ரூபாய்க்கு விற்க வேண்டிய நிலைமை ஏற்படும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் சரத் அத்தநாயக்க மேலும் தெரிவித்துள்ளார். 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.