அசத்தியத்துக்கு எதிரான போராட்டக் களம்; பலஸ்தீனம்!

வரலாற்றுத் துரோகத்தை நினைவு கூறும் "நக்பா"

அப்ரா அன்ஸார் ✍️

ஒரு சமூகத்தின் வரலாறே அதனை தொடர்ந்து வாழ வைக்கும்.எமது அடையாளங்களை இழக்கும் போது வரலாறும் எமக்கு இல்லாது போய் விடும் என்ற அச்சம் இருக்கிறது.எனவே அதனை பாதுகாக்க வேண்டிய கடமை அனைவருக்கும் உண்டு.இஸ்ரேல் - பலஸ்தீன போர் பற்றிய பல்வேறு தரப்பினர் பல்வேறு விதமாக எழுதினாலும்,கூறி வந்தாலும் . இறுதியில் பலஸ்தீனத்துக்கே வெற்றி என்பது ஆணித்தரமாக உள்ளது.

இஸ்ரேல் அரசு 1948 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட வேளையில் 7 இலட்சம் பலஸ்தீன மக்கள் தமது சொந்த இடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள்.இந்த துன்பகரமான சம்பவம் இன்றும் பல்வேறு கோணங்களில் இடம்பெற்று வருவதை காண முடிகின்றது.

நக்பா” என்பது “பேரழிவு” என்பதற்கான அரபு வார்த்தையாகும். 1948 ஆம் ஆண்டில் 700,000 பாலஸ்தீனியர்கள் தங்கள் வீடுகளில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றி, இஸ்ரேல் ஸ்தாபிக்க வழிவகுத்த தினம் “நக்பா தினம்” என்று அழைக்கப்படுகிறது.

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் குறிப்பிடத்தக்க பகுதிகளை இணைப்பதற்கான புதிய இஸ்ரேலிய கூட்டணி அரசாங்கத்தின் திட்டம் சர்வதேச ஒழுங்கிற்கு ஒரு அடியாக இருக்கும் என்றும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படுவதற்கான வாய்ப்புகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என்றும் ஐ.நா. மனித உரிமைகள் நிபுணர் மைக்கேல் லிங்க் எச்சரித்திருந்தார்.

 “திட்டமிடப்பட்ட இணைப்போடு ஒரு தலைப்பட்சமாக முன்னேற 2020 ஜூலை 1 ம் திகதி இஸ்ரேல் எடுத்த முடிவு பிராந்தியத்தில் மனித உரிமைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது, மேலும் இது விதிமுறைகளை அடிப்படையாகக் கொண்ட சர்வதேச ஒழுங்கிற்கு கடுமையான கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும்” என்று 1967 முதல் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனிய பிராந்தியத்தில் உரிமைகள் மனித உரிமை நிலைமை குறித்து ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் மைக்கேல் லிங்க் கூறியுள்ளார்.

இஸ்ரேலின் இணைப்புத் திட்டங்கள் அமெரிக்காவால் ஆதரிக்கப்பட்டு வசதி செய்யப்படுகின்றன என்று லிங்க் எச்சரிக்கை தெரிவித்திருந்தார்.     

இணைப்புத் திட்டங்கள் தொடர்ந்தால், மேற்குக் கரையில் எஞ்சியிருப்பது “பாலஸ்தீனம் பண்டுஸ்தான்” ஆக மாறும், இது துண்டிக்கப்பட்ட பிரதேசங்கள் ஒரு தீவுக்கூட்டம் போன்று, வெளி உலகத்துடன் எந்த தொடர்பும் இல்லாமல் இஸ்ரேலால் சூழப்பட்டும் நிலை உருவாகிவிடும் என்றும், சிறப்பு அறிக்கையாளர் மேலும் கூறினார்.

இந்த இணைப்பு திட்டத்தில் ஜோர்டான் பள்ளத்தாக்கும் அடங்கும், இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால், “மோசமான மனித உரிமை விளைவுகளின் அடுக்கிற்கு” வழிவகுக்கும்.

இந்த திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதானது ஒரு நியாயமான மற்றும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுக்கான மீதமுள்ள எந்தவொரு வாய்ப்பையும் குறைமதிப்பிற்கு உட்படுத்தும், என்று அவர் கூறினார். “இந்த திட்டம் 21 ஆம் நூற்றாண்டின் இனவெறியை உறுதியாக்கும், மேலும் பாலஸ்தீனியர்களின் சுயநிர்ணய உரிமைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடும். சட்டரீதியாக, ஒழுக்க ரீதியாக, அரசியல் ரீதியாக இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.”

இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிலிருந்து எழும் மனித உரிமை மீறல்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பிரதேசங்கள் இணைக்கப்பட்ட பின்னரே தீவிரமடையும், என்று லிங்க் கூறியிருந்தார். “ஏற்கனவே, கட்டாய வெளியேற்றங்கள் மற்றும் இடம்பெயர்வு, நிலம் பறிமுதல் மற்றும் அந்நியப்படுதல், குடியேற்ற வன்முறை, இயற்கை வளங்களை கையகப்படுத்துதல் மற்றும் இனத்தின் அடிப்படையில் சமமற்ற அரசியல், சமூக மற்றும் பொருளாதார உரிமைகள் என்ற இரு அடுக்கு முறை சுமத்தப்படுவதை  காண்கிறோம்.”

ஐ.நா. நிபுணர் 1945 இல் ஐக்கிய நாடுகள் சபையின் சாசனம் ஏற்றுக்கொள்ளப்பட்டதிலிருந்து பலவந்தமாக இணைப்பது சர்வதேச சட்டத்தின் கீழ் கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது என்றும் கூறினர்.

ஒரு தலைமுறைக்குள் நடந்த இரண்டு உலகப் போர்களின் கசப்பான படிப்பினைகளிலிருந்து, சர்வதேச சமூகம் இணைப்பதை தடைசெய்தது, ஏனெனில் அது மோதல்கள், பரந்த மனித பேரவலங்கள், அரசியல் உறுதியற்ற தன்மை, பொருளாதார அழிவு மற்றும் நிறுவனமயப்படுத்தப்பட்ட பாகுபாடு ஆகியவற்றை உருவாக்குகிறது.

1967 முதல், ஐ.நா.பாதுகாப்பு சபை படை பலத்தை பயன்படுத்தி அல்லது போரினால் “பிரதேசத்தை கையகப்படுத்தும்” கொள்கையை நிராகரித்து வந்துள்ளது. இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு குறித்த பல சந்தர்ப்பங்களில் அது கண்டனங்களை வெளியிட்டுள்ளது.

நமது நவீன சர்வதேச சட்ட முறையை உருவாக்குவதற்கு போருக்குப் பிந்தைய ஆண்டுகளில் அமெரிக்கா பல முனைகளில், ஒரு சாதகமான சக்தியாக இருந்துவந்துள்ளது.” உலகளாவிய அமைதி மற்றும் செழிப்புக்கான சிறந்த பாதை, உரிமைகள் மற்றும் பொறுப்புகளின் வலுவான வலையமைப்பு என்பதை அது புரிந்துகொண்டும் இருத்தது. ஆனால் இப்போது, அமெரிக்கா மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவோரை தனிமைப்படுத்தும் அதன் தார்மீக பொறுப்பிலிருந்து மீறி, அப்பட்டமான சர்வதேச சட்ட மீறலுக்கு தீவிரமாக ஒப்புதல் அளித்து வருகிறது.

இது தொடர்பாக ஊடகவியலாளர் யிவோன் ரிட்லி (Yvonne Ridley) தனது கட்டுரையில் பின்வருமாறு விவரிக்கிறார்:

பாலஸ்தீனத்தை உலக வரைபடத்திலிருந்து அழித்து மகா இஸ்ரேலை அமைப்பதே நெத்தன்யாகுவின் நோக்கம் ஆகும்.

பாலஸ்தீன் மற்றும் மத்திய கிழக்கில் அமைதி தொடர்பாக, உலகத் தலைவர்களும், மேற்கத்திய ஊடகவியலாளர்களும் கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக அவர்களது பார்வையை அதிதிலிருந்து அகற்றியுள்ளனர். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் வினோதமான கருத்துக்களும், கோவிட் -19 ஐ அவர் கையாண்ட விதமும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

உலக ஊடகங்களின் கவனம் வேறு பக்கம் திரும்பியிருக்கையில், எப்போதும் போலவே, இஸ்ரேல் ஒரு பேரழிவு சூழ்நிலையை அதன் தீங்கு விளைவிக்கும் திட்டங்களை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பாக மாற்றியுள்ளது. பரம அரசியல் போட்டியாளர்களான பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் பென்னி காண்ட்ஸ் ஆகியோர் பாலஸ்தீனத்தின் மேலும் 30 சதவீதத்தை அபகரிக்கப் போகிறார்கள், இரு மாநில தீர்வின் எந்தவொரு யதார்த்தமான வாய்ப்பையும் முற்றாக அழிக்கப் பார்க்கிறார்கள் என்று கடந்த காலங்களில் தெரிவித்திருந்தார்.

கடந்த ஏப்ரல் மாதம் ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலமில் உள்ள அல்-அக்ஸா மஸ்ஜித் வளாகத்தில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகள்  நடத்திய  அடுத்தடுத்த தாக்குதலினால் குறைந்தது 152 பாலஸ்தீனியர்கள் காயமடைந்துள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளதாக அல்ஜெஸீரா செய்தி வெளியிட்டிருந்தது.

அல் ஜெசீரா ஊடகவியலாளர் ஷிரீன் அபூ அக்லேஹ் பலஸ்தீனின் மேற்குக் கரையின் ஜெனின் பிரதேசத்தில் பணியில் ஈடுபட்டிருக்கும் போது இஸ்ரேலிய படையினரால் தலையில் சுடப்பட்டு கொல்லப்பட்டார்.

அவர் தேடப்படும் போது ஊடகவியலாளர் என்று பெயர் குறிப்பிடப்பட்ட மேலங்கியையும் அணிந்திருந்தார் எனினும் அவரை இஸ்ரேல் படையினர் கொடூரமான முறையில் கொலை செய்துள்ளனர்.பிரபல பாலஸ்தீன பெண் பத்திரிக்கையாளர்

இஸ்ரேல் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதை கண்டித்து பாலஸ்தீனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

20 ஆண்டுகளுக்கு மேலாக அல் ஜெசீரா செய்தி நிறுவனத்துக்காக பாலஸ்தீனம் தொடர்பான செய்திகளை சேகரித்து வந்த ஷிரீன் அபு ஜெனின் நகர அகதிகள் முகாமில் சோதனையிட்ட இஸ்ரேல் வீரர்களால் சுட்டு கொல்லப்பட்டார்.

பத்திரிக்கையாளர்களுக்கான பிரத்யேக உடையை அணிந்திருந்த போதும், அவர் தலையில் சுட்டு கொல்லப்பட்டதை கண்டித்து பாலஸ்தீனர்கள் பேரணி சென்றுள்ளனர்.

அப்போது அவர்களுக்கும், இஸ்ரேல் போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்து.

1996 இல் ஆரம்பிக்கப்பட்ட அல்ஜெசீரா செய்தி நிறுவனத்தின்  ஊடகவியலாளர்கள் 12 பேர் இதுவரையில் களத்தில் கடமையின் போது இஸ்ரேல் படையினரால் கொல்லப்பட்டுள்ளதாக அல் ஜெசீரா தெரிவித்துள்ளது.

இஸ்ரேலினை ஆதரிக்கும் சர்வதேச நாடுகள் பலஸ்தீன்,ஈராக் , ஆப்கானிஸ்தான் பற்றி தெளிவடைய தொடர்ந்தும் தவறிழைத்து வருகின்றனர்.பலஸ்தீன தேசத்துக்கு வெற்றி நிச்சயம் என்பது எழுதப்பட்டது அதில் எந்த சந்தேகமும் கிடையாது.அந்த தேசத்து மக்களின் போராட்டம் என்பது அசத்தியத்துக்கு எதிரானது.போராட்டம் நிச்சயம் வெல்லும் எனினும் காலம் செல்லும்!

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.