ஆஸ்திரேலியாவின் பிரபல கிரிக்கெட் வீரரான ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 46.

சனிக்கிழமை இரவு ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்தின் டவுன்ஸ்வில்லே பகுதியில் சைமண்ட்ஸ் பயணித்த கார் விபத்துக்குள்ளானது.

ஐசிசி வெளியிட்ட தகவலின்படி, சைமண்ட்ஸ் காரில் தனியாக பயணித்திருக்கிறார். அப்போது, கார் கட்டுப்பாட்டை இழந்து உருண்டு விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் , அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த விபத்து குறித்து தடயவியல் விபத்து பிரிவு தற்போது விசாரணை நடத்தி வருகிறது.

கடந்த 1998 ஆம் ஆண்டு, லாஹூரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக முதன்முறையாக ஒரு நாள் போட்டிகளில் விளையாட தொடங்கிய சைமண்ட்ஸ்,  ஒரு நாள் போட்டிகளில்  விளையாடி 5088 ரன்கள் குவித்துள்ளதுடன் 26 டெஸ்ட் போட்டிகளில் 1462 ரன்களை எடுத்துள்ளார்.

பிபிசி தமிழ் கருத்துரையிடுக

Blogger இயக்குவது.