கோதுமை மாவை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் அநியாயமாக மாவின் விலையை அதிகரித்து வருவதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

50 கிலோ கிராம் கோதுமை மாமூட்டை ஒன்றின் விலை 12,500 ரூபாவாக உயர்ந்துள்ளதாக சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

நேற்று முதல் கோதுமை மாவின் விலை திடீரென 35 ரூபாவால் அதிகரிக்கப்பட்டதையடுத்து, அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன இன்று அவர்கள் தமது தொழிலை தொடர முடியாத நிலைக்கு வந்துள்ளனர்.

அதேவேளை ‘கோதுமை மாவின் திடீர் விலை அதிகரிப்பு மிகவும் அசாதாரணமானது, இந்த விடயங்களை ஆராய யாரும் இல்லை. இந்த நாட்டில் செயலூக்கமான அரசாங்கம் இல்லாத ஒரு சூழ்நிலை உருவாகியுள்ளது,’ என்று அவர் கூறினார்.

இதனால், பேக்கரி உரிமையாளர்களாகிய நாங்கள், எங்கள் பேக்கரி வியாபாரத்தை மூடுவதா அல்லது தின்பண்டங்களை விரிவுபடுத்துவதா என விவாதித்து வருகிறோம், என அவர் வேதனை தெரிவித்தார்.



கருத்துரையிடுக

Blogger இயக்குவது.