இளைஞர் பாராளுமன்றத்தின் வெளிவிவகார பிரதி அமைச்சர் அஹ்மத் ஸாதிக் இந்தோனேசியாவின் உயர்ஸ்தானிகராலய அதிகாரி திரு.ப.நூர்தீனை சந்தித்தார்.
இந்த சந்திப்பின்போது இரு நாடுகளினதும் கலாச்சார மேம்பாடு, தலைமைத்துவம் மற்றும் மொழி ரீதியான கற்கை என்பவற்றை விருத்திசெய்வது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. இந்த சந்திப்பில் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் முப்தி மற்றும் மொஹமட் அஸீம் ஆகியோரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த நிகழ்வில் இலங்கை இளைஞர்களின் வெளிவிவகார மற்றும் இராஜதந்திர நகர்வுகளை விருத்திசெய்யும்முகமாக இளம் சமூகத்தின் மத்தியில் இராஜதந்திர கல்விமுறைகள், மாதிரி ஐக்கிய நாடுகள் நிகழ்வுகள் மூலம் அறிமுகப்படுத்துவது தொடர்பாகவும் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களினால் அங்கு கலந்துரையாடப்பட்டது.
இறுதியில் திரு.ப. நூர்தீன் இலங்கை இளைஞர்களின் மத்தியில் கலாச்சாரத்தை மேம்படுத்தும் முகமாக செயலமர்வுகள் மற்றும் நிகழ்வுகளை எதிர்காலங்களில் நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்க தயார் என்றும் குறிப்பிட்டார்.
Ahmath Sadique
Deputy Minister of External Affairs and Diplomatic Relations Sri Lanka Youth Parliament.