கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஜூலை மாதம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.தற்போது பிரயோக பரீட்சைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் இதற்காக கம்பிகள், ஆளிகள் மற்றும் மின்குமிழ்கள் போன்றவற்றைக் கொள்வனவு செய்ய பெருந்தொகை பணத்தைச் செலவிட நேரிட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன தெரிவித்துள்ளார்.

மேலும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி புலமைப்பரிசில் பரீட்சையையும் 16 ஆம் திகதி முதல் உயர்தரப் பரீட்சையையும் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கருத்துரையிடுக

Blogger இயக்குவது.