களுத்துறை, அடுலுகம பிரதேசத்தினைச் சேர்ந்த 9 வயது சிறுமியின் கொலையுடன் தொடர்புபட்டவர்கள் இன்னும் ஒரிரு நாட்களில் கைது செய்யப்படுவர் என பண்டாரகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ராஜபக்ஷ நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

குறித்த சிறுமியின் படுகொலை தொடர்பான விசாரணைகள் பல கோணங்களில் நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில் குறித்த சிறுமின் இல்லத்திற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் இன்று (29) ஞாயிற்றுக்கிழமை விஜயம் செய்தார்.

இதன்போது, பண்டாரகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியுடன் குறித்த சம்பவம் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார். இதன்போது சந்தேகநபர்களின் கைது தொடர்பில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி   நம்பிக்கை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, நீதவானின் உத்தரவின் பேரில் நாளை குறித்த சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. 

Vidiyal கருத்துரையிடுக

Blogger இயக்குவது.