நாட்டில் தடையில்லா மின்சார விநியோகத்தை உறுதிப்படுத்தும் வகையில் மின்சார உற்பத்திக்கான எரிபொருளை முன்னுரிமையாக வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

திருத்தப் பணிகளின் பின்னர், நுரைச்சோலை அனல்மின் நிலையம் நாளைய தினம் முழுமையாக இயங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், நீர் மின் உற்பத்தியுடன் அடுத்த வார தொடக்கத்தில் நாடு முழுவதும் தடையில்லா மின்சாரத்தை வழங்க அரசாங்கம் ஆலோசித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஜூன் 1ஆம் திகதிக்குள் தடையில்லா மின்சாரம் வழங்குவதே ஆரம்பத் திட்டமாக இருந்தது என்றும்  ஆனால் இப்போது அடுத்த வார தொடக்கத்தில் இருந்து அதைத் ஆரம்பிக்க முடியுமா என்று எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

தமிழ் மிரர் 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.