சுகாதார ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்பட்டால், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எதிர்வரும் மே 25 ஆம் திகதிக்கு பின்னர் முன்னறிவிப்பின்றி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடும் என சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் கலாநிதி சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம்(18) ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தமது மத்திய குழுக் கூட்டத்தில் இத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.‘சுகாதார அமைச்சிலுள்ள ஒரு சில அதிகாரிகளின் தன்னிச்சையான நடவடிக்கைகளால், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மே 25 ஆம் திகதிக்குப் பிறகு, எந்தவித முன்னறிவிப்புமின்றி, ஊதியக் குறைப்பு ஏதேனும் செய்யப்பட்டால், தொழிற்சங்கப் போராட்டத்தைத் தொடங்க முடிவு செய்துள்ளது,என்று அவர் கூறியுள்ளார்.

தேசிய சுகாதார சேவைகளை தனியார் மயமாக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரதமர் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர்கள் மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஆகியோரின் கோரிக்கைகளுக்கு அமைய இது தொடர்பில் பல சுற்று கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாக சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.