2022 ஆம் ஆண்டிற்கான மாதிரி ஐக்கிய நாடுகள் சபை மாநாடு இம்முறை ஐக்கிய அரபு அமீரகத்தில் மே மாதம் 20 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரை இடம்பெற்றது.

இம் மாநாட்டில் இளைஞர் பாராளுமன்ற வெளிவிவகார பிரதியமைச்சர் அஹ்மத் ஸாதிக்,இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் முப்தி ஆகியோர் பங்குபற்றியதோடு மேலும் 80 மேற்பட்ட சர்வதேச நாடுகளில் இருந்து 120 இளம் தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில் இலங்கை சார்பாக மூன்று இளம் தலைவர்கள் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இம்மாநாட்டின் தொனிப்பொருளாக "ரஷ்யா- உக்ரைன் முரண்பாடும், அவற்றுக்கான தீர்வும்" என்பதாகவே அமைந்திருந்தது. அத்தோடு இளைஞர் பாராளுமன்ற வெளிவிவகார பிரதியமைச்சர் அஹ்மத் ஸாதிக் கருத்து தெரிவிக்கையில், இம்மாநாட்டில் துணைக்குழுக்களிற்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிகள் தொடர்பாக இளம் தலைவர்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டதுடன் அந்நாடுகளில் இருந்து சுற்றுலாத்துறைக்கான ஆதரவினை வழங்குமாறும் வேண்டப்பட்டது.

இவ்வாறான மாதிரி ஐக்கிய நாடுகள் சபை மாநாடுகள் எதிர்வரும் ஆண்டுகளில் துருக்கி, மலேசியா மற்றும் அமேரிக்கா ஆகிய நாடுகளில்  நடைபெறவுள்ளன. இதற்காக இளைஞர் பாராளுமன்ற வெளிவிவகார பிரதியமைச்சர் அஹ்மத் ஸாதிக் மற்றும் களுத்துறை மாவட்ட இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் முப்தி ஆகிய இருவரும் அழைக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


Ahmath Sadique

Deputy Minister of External Affairs and Diplomatic Relations Sri Lanka Youth Parliament.
கருத்துரையிடுக

Blogger இயக்குவது.