கடந்த 9 ஆம் திகதி நாடு முழுவதும் இடம்பெற்ற 855 வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

அன்றைய தினம் நிட்டம்புவ பிரதேசத்தில் இடம்பெற்ற அமரகீர்த்தி அத்துகோரலவின் படுகொலை மற்றும் அவரது பாதுகாப்பு அதிகாரி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முச்சக்கர வண்டி சாரதியான 37 வயதுடைய சந்தேகநபர் நேற்று (27) நிட்டம்புவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக அவரது சகோதரர் முன்பு கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இவர் சமுர்த்தி கட்டுப்பாட்டாளர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் இதுவரை 17 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

அததெரண

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.