9 வயது சிறுமி மாயம்! பொலிஸார் வலை வீச்சு.அட்டுலுகம பகுதியில் 9 வயது சிறுமி ஒருவர் நேற்று முதல் காணாமல் போயுள்ளதாக பண்டாரகம பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.

நேற்று (27) காலை 10 மணியளவில் குறித்த சிறுமி காணாமல் போயுள்ளதாக பெற்றோர் தமது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.

சிறுமி தனது வீட்டுக்கு அருகிலுள்ள கடையொன்றுக்கு சென்றுள்ளதுடன், அதன் பின்னர் வீடு திரும்பவில்லையென குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், சி.சி.ரி.வி. காட்சிகளின் மூலம் சிறுமி கடையிலிருந்து வெளியே வந்தமை அவதானிக்கப்பட்ட போதிலும், வீடு திரும்பவில்லையென பெற்றோர் தமது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.

(M.F.M.Ali)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.