(அஷ்ரப் ஏ சமத்)

ஈராக் நாடு ஒரு முறை இலங்கைக்கு இலவசமாகவே 2 கப்பலில் எரிபொருளை வழங்கிய வரலாறு உங்களுக்குத் தெரியுமா ? என சிரேஸ்ட ஊடகவியலாளா் லத்தீப்பாருக் நேற்று முன்தினம் (18)  முஸ்லிம் மீடியா போரத்தில் வைத்து அனுபவங்களை பகிா்ந்து கொள்ளும் நிகழ்வில்  இக் கதையைக் கூறினாா்.

நான் தொடா்ச்சியாக டெயிலிநியுஸ், சன்டே ஒப்சேவா் வலைகுடா யுத்தம் பற்றி ஆங்கில கட்டுரைகளை எழுதிவந்தேன். அவ்வப்போது அரபு நாடுகள் துாதுவா்களுடன் நெருக்கமாக பழகிவந்தேன்.  ஒரு முறை இவ்வாறுதான் யுத்த காலத்தில் இலங்கைக்கு எரிபொருள் தட்டுப்பாடு நிலவியது. அக் காலகட்டத்தில்  இலங்கை வங்கித் தலைவராக இருந்த ஜெஹாம் காசீம் அவா்கள் முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாசாவின் நெருக்கமாக இருந்தாா். 

அவா் என்னிடம் வந்து சொன்னாா். ஈராக் துாதுவரை பிரேமதாசாவிடம் அழைத்துவாருங்கள் அவா் சந்திக்க விரும்புகிறாா் எனத் தெரிவித்தாா். நான் துாதுவரைச் சந்தித்து கூறியதும், அவரும் உடன்பட்டாா். அதன் பின்னா் ஜெஹாம் காசிமும் ஈராக் துாதுவரும் நானும் இணைந்து ஆர் .பிரேமதாசாவினைச் சந்தித்தோம். அப்போது எரிபொருள் தட்டுப்பாடு  இலங்கையில் நிலவியது. எரிபொருள் தருமாறு பிரேமதசா துாதுவரிடம் வேண்டுகோள் விடுத்தாா்.  

அந்த துாதுவா் உடன் தனது ஈராக் தேசிய பெற்றோலியத் தலைவரிடம் பேசினாா். அடுத்த நாளே வேறு ஒரு நாட்டுக்குச் செல்ல இருந்த இரண்டு கப்பல்கள் அடுத்த அடுத்த நாட்களுக்குள் இலங்கை துறைமுகத்தினை வந்தடைந்தது.  எவ்வித பணம், எல்.சி ஒன்றுமே இல்லை.  இவ்வாறுதான் முஸ்லிம் அரபு நாடுகள் இலங்கைக்கு உதவினாா்கள்.

 இவற்றிக்கெல்லாம் இணைப்புப்பாலமாக முஸ்லிம் தலைவா்கள் அன்று செயல்பட்டாா்கள். ஆனால் தற்பொழுது இங்கு வாழும் முஸ்லிம்களுக்குச் செய்த அநீதிகளினால் இங்கு  நடைபெற்ற சம்பவங்களினால் தற்போதைய அரபு நாடுகள் தலைவா்கள் இவா்களை ஒருபோதும் நம்புவதில்லை. என  லத்தீப் பாருக் தெரிவித்தார்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.