எதிர்வரும் மூன்று வாரங்கள் எரிபொருள் மற்றும் எரிவாயுவை விநியோகிப்பதில் சிரமமான காலகட்டமாக இருக்கும்.

இதன் காரணமாக நாட்டு மக்கள் அனைவரும் தங்களைப் பற்றி மாத்திரம் சிந்திக்காது செயல்பட வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் நிலைமை குறித்து பாராளுமன்றத்தில் இன்று (07) விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு உரையாற்றுகையில் இவ்வாறு குறிப்பிட்ட பிரதமர், தற்போதைய நிலைமைக்கு மத்தியில் பொது மக்கள் தமது பயணங்களை வரையறுத்துக்கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

அரசாங்க தகவல் திணைக்களம் 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.