*துணிந்தெழு விருது - 2022* 


கலாபூஷணம் நூருல் அயின் நஜ்முல் ஹுசைன் அவர்களுக்கு கலை மற்றும் இலக்கியத்துறையில் அர்ப்பணிப்பாக சேவையை வழங்கியமைக்காக இவ்விருது ஸ்கை தமிழ் ஊடக வலையமைப்பின் ஊடாக வழங்கி கௌரவிக்கப்பட்டது..

*அவர்களை பற்றிய சிறிய விளக்கம்*

'மின்னும் தாரகைகள்' எனும் இலங்கை முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள் பற்றிய ஆய்வு நூல் ஒன்றை சிரேஷ்ட ஊடகவியலாளரும், முன்னாள் அரசாங்க தகவல் திணைக்கள அதிகாரியுமான,  கலாபூசணம் நூருல் அயின் நஜ்முல் ஹூசைன்  சிறந்த படைப்பிலக்கிய மற்றும் ஊடக பங்களிப்புக்கான ஆளுமை விருதினை பெற்றுக் கொண்டார்.

கொழும்பு திறந்த பல்கலைக் கழகத்தில் பொதுசனத் தொடர்புத்துறை சான்றிதழும், தொலைக்கல்வி நிறுவனத்தின் பொதுசனத்துறை டிப்ளோமா பட்டமும், கொழும்பு பல்கலைக்கழகத்தில் பத்திரிகைத்துறை டிப்ளோமா பட்டமும் பெற்றுள்ளார். கணினித் துறையிலும் பல பயிற்சிகளைப் பெற்றவர்.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் கொழும்பு மாவட்ட தகவல் அதிகாரியாக  பதவி  உயர்வு பெற்ற இவர் கொழும்பு மாவட்ட செயலக தகவல் பிரிவுக்குப் பொறுப்பதிகாரியாகவும் சுமார் பத்தாண்டு காலம் கடமை புரிந்தார். 

உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டுக்காக எழுதப்பட்ட 'இலங்கை முஸ்லிம் பெண்களின் ஊடகப் பங்களிப்பு' என்ற இவரது ஆய்வுக் கட்டுரை  என்பனவும் நூலுரு பெற உள்ளன.

2006ஆம் ஆண்டு கலாசார அமைச்சினால் கலாபூஷணம்  அரச விருதினை பெற்றுக் கொண்டார்.

'திதுலன தாரக்கா' எனும் சிங்கள மொழியிலான நூல் அண்மையில் வெளிவந்தது
குறிப்பிடத்தக்கது.

இவர் சேவையை  பாராட்டி இவ் விருதினை வழங்கி வைப்பதில் ஸ்கை தமிழ் மற்றும் துணிந்தெழு சஞ்சிகை பெருமிதம் கொள்கிறது.

More details :
https://www.facebook.com/104753731726815/posts/352873336914852/ 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.