தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவரான துமிந்த சில்வாவை, ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் வைத்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர்.

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அவரைக் கைது செய்து சிறைச்சாலை காவலில் வைக்குமாறு சீ.ஐ.டியினருக்கு உயர் நீதிமன்றம் நேற்று (31) உத்தரவு பிறப்பித்தது.

துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொது மன்னிப்பை இடைநிறுத்தி இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஸ்ரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலையின் 18 ஆம் இலக்க விடுதியில் துமிந்த சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று இன்று (01) மதியம் தகவல்கள் வெளியாகியிருந்தன.

அதற்கமைய வைத்தியசாலைக்குச் சென்ற சீ.ஐ.யினர், அவரைக் கைதுசெய்துள்ளனர்.

Tamil Mirror 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.