அரச ஊடக நிறுவன பதவிகளில் முஸ்லிம்கள் முற்றாக புறக்கணிப்பு !

முஸ்லிம் அரசியல்வாதிகள் மௌனம் 

ஏ.எச்.எம்.பூமுதீன்


அரசாங்க ஊடக நிறுவனங்களுக்கு - புதிய தலைவர்கள் மற்றும் பணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

#ஊடக அமைச்சர் - பந்துல குணவர்தன , மேற்படி நியமனங்களை ஒருசில தினங்களுக்கு முன்னர் வழங்கி வைத்தார்.

இந்த நியமனங்களில் - முஸ்லிம் தரப்பு முற்றாக புறக்கணிக்கப்பட்டுள்ளது.

கடந்த பல வருட காலமாக ITN நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினராக இருந்து வந்த புரவலர் #ஹாசிம் ஒமரும் - இந்த முறை நியமிக்கப்படவில்லை.

ஊடகத்துறையிலும் கல்வித்துறையிலும் எத்தனையோ தகுதியான சிரேஷ்டத்துவம் கொண்டவர்களும் கல்வியியலாளர்களும் முஸ்லிம் சமுகத்துக்குள் இருக்கத்தக்கதாக இந்த புறக்கணிப்பு இடம்பெற்றுள்ளமை - திட்டமிட்ட சதியாகவே முஸ்லிம் சமுகத்தினரால் பார்க்கப்படுகின்றது.

#இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தை பொறுத்தவரை -  முஸ்லிம் சேவையில் - ஐவேளை #அதான் ஒலிபரப்புக்கு பெருந்தொகை பணத்தை வழங்கி அனுசரனை வழங்கும் - பிரபல ஆடை நிறுவனமான  NO LIMIT , தனது வர்த்தக நாமத்தை பயன்படுத்துவதில்லை. 

ஆனால் - சிங்கள சேவையில் - அவர்களது பௌத்த மத நிகழ்ச்சிகளை அனுசரனை இன்றியே நடத்திச் செல்கின்றனர்.

அதேபோல் - அரச ஊடக நிறுவனங்கள் அனைத்திலும் கடமையாற்றும் முஸ்லிம் #ஊடகவியலாளர்களும் #கட்டுப்பாட்டாளர்களும் #அறிவிப்பாளர்களும் - பெருந்தொகையான முஸ்லிம் அனுசரனையாளர்களை நெருங்கி நிகழ்ச்சிகளுக்கு அனுசரனை பெற்றுக் கொடுத்து வருகின்றனர்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் - இன்று ஓரளவு நஷ்டமின்றி செயற்படுவதற்கு பிரதான காரணம் - முஸ்லிம் #சேவையில் இடம்பெறும் அனுசரனைகளே என தகவல்கள் வெளிப்படுத்துகின்றன. ஆனால் , இந்த தகவல் திட்டமிட்டு மூடி மறைக்கப்படுவது வேறு விடயம்.

இன்று - இந்த அரசாங்கத்தின் கெபினட் அமைச்சர் #ஹாபீஸ் நஸீர் அஹமட். அதுபோல் #காதர் மஸ்தான் , #அலி சப்ரி மற்றும் மறைமுக ஆதரவளிக்கும் ஓரிரு முஸ்லிம் எம்பீக்கள் இந்த விவகாரத்தில் உடன் தலையீடு செய்ய வேண்டும்.

முஸ்லிம் சமுகத்துக்குரிய நியாயமான நியமனங்களை பெற்றுத்தர முயற்சிக்க வேண்டும். முஸ்லிம் சமுகத்துக்குரிய உரிமைகளுக்குள் இந்த நியமணங்களும் உள்ளடங்கும் என்பதை நீங்கள் அறியாதவர்களும் அல்லர்.

அரச ஊடக நிறுவன பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளோர் கீழே உள்ளது.

SLRC

---------

Asanga Priyanath Jayasuriya - 

Chairman - Sri Lanka Rupavahini Corporation.


Directors :-

-----------------

Prof. Chaminda Ratnayake

Prof. D. M. Ajith Dissanayake

Rakhitha Abeygunawardena (Attorney-at-Law)


SLBC

----------

Chairman - Hudson Samarasinghe


Directors :-

------------------

Prof. Ven. Magammana Pagnananda Thero

Priyantha K. Ratnayake

J. Yogaraj

M. Sisira Kumara


ITN

-------

Chairman - Ganaka Amarasinghe 

(Chartered Accountant)


Directors:-

------------------

Lalith Piyum Perera (Attorney at Law)

Lecturer Maheshwari Mahimadas

Ravindra Guruge

Indika Liyanahewage

Hasantha Hettiarachchi


Lake House 

(ANCL)

--------------------

Chairman - Media Ministry Secrtatary Anusha Palpita 


- ஏ.எச்.எம். பூமுதீன் -

Boomudeen Malik

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.