அத்தனகல்ல MOH காரியாலயத்தின் ஏற்பாட்டில் நேற்றைய தினத்தில் (20) கஹட்டோவிட்ட நபவிய்யா இளைஞர் அமைப்பின் காரியாலயத்தில் யானைக்கால் நோய் தொடர்பில் இரத்தப் பரிசோதனை மாதிரி பெற்றுக்கொள்ளும் முகாம் நடைபெற்றது.

மேற்படி முகாமில்  பிரதேச சுகாதார அதிகாரிகள், கிராம சேவகர் திரு ஜானக்க, முஹிய்யத்தீன் ஜும்மா பள்ளிவாசல் நிர்வாக சபைத் தலைவர் அல் ஹாஜ் நஜீம், கஹட்டோவிட்ட புகாரி தக்கியா மத்திச்சம் அல் ஹாஜ் உஸ்மான், புகாரி தக்கியா ஆலிம் அப்துல் பாரி , நபவிய்யா அமைப்பின் உறுப்பினர்கள், கஹட்டோவிட்ட YMMA அமைப்பின் தலைவர் அல் ஹாஜ் பிர்தௌவ்ஸ் உட்பட பல்வேறு முக்கியஸ்தர்களும் அயல்பிரதேச மக்களும் இந்நிகழ்வில் கலந்து இரத்த பரிசோதனைக்காக மாதிரிகளை வழங்கி ஒத்துழைப்பு வழங்கி சிறப்பித்தனர்.

கஹட்டோவிட்டாவின் ஏனைய பகுதிகளுக்கான பரிசோதனைகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தினங்களில் உரிய இடங்களில் நடைபெறவுள்ளதாக இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பாளராக சேவையாற்றும் அல் ஹாஜ் பிர்தௌவ்ஸ்  தெரிவித்துக்கொள்வதுடன் ஊர்மக்கள் இந்த முகாமில் கலந்து பயனடைந்து கொள்ளுமாறும்  கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

21.ஆம் திகதி அல் பத்றியா ம.வி

22.கஹட்டோவிட்ட கிளினிக்

23.அமீனியா பள்ளிவாசல் 

24.Sedo கட்டிடம்

27.இமாம் ஷாபி நிலையம்.

இரவு 08 முதல் 10 வரை மட்டுமே நடைபெறும்.

தகவல் - கஹட்டோவிட்ட நியூஸ் பேஜ் ஒபீசியல்கருத்துரையிடுக

Blogger இயக்குவது.