கம்பஹா MOH காரியாலயத்தின் ஏற்பாட்டில் Alliance Development Trust, கஹட்டோவிட்ட YMMA , ஷாபி நிலையம் ஆகியவற்றின் அனுசரணையுடன் தோல் நோய் தொடர்பான ஒரு நாள் வைத்திய முகாம் ஒன்றினை எதிர் வரும் 07.06.2022,  செவ்வாய்க்கிழமை , காலை 9:00 மணி முதல் கஹட்டோவிட்ட இமாம் ஷாபி நிலையத்தில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கஹட்டோவிட்ட YMMA கிளை தலைவர் அல்ஹாஜ் பிர்தவ்ஸ் தெரிவித்தார்.

தேவையுடையவர்கள் எதிர்வரும் 05.06.2022 ஞாயிற்றுக்கிழமை இரவு 9:00 மணிக்கு முதல் 0727 4222 42 என்ற வட்ஸப் இலக்கத்திற்கு தங்களுடைய பெயர் மற்றும்  முகவரியினை வழங்கி பதிவு செய்து கொள்ளுமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குறித்த வைத்திய முகாம் போன்று மேலும் பல வைத்திய முகாம்களை அருகிலுள்ள கிராமங்களிலும் நடாத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். (Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.