உத்தேச 21 ஆவது திருத்தம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் முகமாக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று 02) பிற்பகல் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் தெரிவித்த கருத்துக்கள்.

சட்டத்தரணிகள் சங்கம், நாட்டிலுள்ள நிபுணர்கள், மதத்தலைவர்கள், இளைஞர் யுவதிகள் என அனைவரும் கோரிய திருத்தத்தையே ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்றத்தில் முன்வைத்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்த 21 ஆவது திருத்தத்தையே நாடாளுமன்றமும் ஏற்றுக்கொண்டுள்ளது. முதல் வாசிப்பும் முன்னோக்கிச் சென்றுள்ளது. எனவே, இரண்டாவது வாசிப்புக்கு எடுத்து விரைவில் அனுமதியையும் பெற்றுக்கொள்ள முடியும். 

இதற்கு தெரிவு குழுவின் போது திருத்தங்களை கொண்டுவர முடியும். அதனை விடுத்து எதற்காக இதனை தாமதப்படுத்துவதற்கு ஏமாற்று வேலைகளை முன்னெடுக்க வேண்டும். மக்கள் கோரியதை நாங்கள் முன்வைத்துள்ளோம்.

ஆனால், தற்போது முன்வைத்துள்ள யோசனையில் 19 ஆவது திருத்தத்தைவிட ஜனாதிபதியை மேலும் பலப்படுத்துவதற்கான உறுப்புரைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையை நீக்குவதை தட்டிக்கழித்துள்ளனர். இதனையா மக்கள் கோரினர். 

ஜனநாயக உலகத்தில் கௌரவத்தை வெற்றிக்கொள்வதற்கு, ஜனநாயக நிறுவனங்களை பலப்படுத்தவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கு அரசாங்கம் இன்னும் தயக்கம் காட்டுகின்றன. 

சர்வ கட்சி அரசாங்கத்தை  அமைக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால கோரினார். கட்சிகளிலிருந்து உறுப்பினர்களை உடைத்து எடுக்க வேண்டாம் எனக் கூறினார். ஆனால், தற்போது அதனையே செய்கின்றனர். தற்போதும் வரலாற்றின் குப்பை குழியிற்கே செல்ல முயற்சிக்கின்றனர். 

ஜனநாயக உலகத்தில் அபகீர்த்திக்கே எங்களுடைய நாட்டை கொண்டுச் செல்ல முயற்சிக்கின்றனர். இதனை செய்ய வேண்டாம். இடம்பெற்றுள்ள சம்பவங்களிலிருந்து இனியாவது பாடத்தை கற்றுக்கொள்ளுங்கள். 

ஜனநாயக நிறுவனங்களை பலப்படுத்தி,  நாட்டை கௌரவமான இடத்துக்கு கொண்டுச் செல்வதை இல்லாதொழித்து, தனிப்பட்ட தேவைகளையே பலப்படுத்த முயற்சிக்கின்றனர். இதனால், எங்களுடைய நாட்டை அபகீர்த்தி கொண்டுச் செல்கின்றனர். இவ்வாறு நடந்தால் நாட்டில் ஸ்தீரத்தன்மை இருக்காது. மக்களாணையை வெற்றிக்கொள்ள முடியுமா, உலக நாடுகளின் நிதி நிறுவனங்களின் உதவியை பெற முடியுமா?

மக்களின் வாழ்வாரதம் சீர்குழைந்துள்ள நிலையில் ஏற்பட்டுள்ள தவறுகளை புரிந்துகொள்ள அரசாங்கம் முயற்சிக்கவில்லை. நாடாளுமன்றம் ஏற்றுக்கொண்டு, முதல் வாசிப்பை நிறைவு செய்துள்ள திருத்தத்தை நிராகரித்துவிட்டு, புதிய 21 ஐ கொண்டுவர முயற்சிப்பது எவ்வளவு மோசமான செயலாகும். இதனை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். இனியும் மக்களை ஏமாற்றும் செயற்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது. 

மக்களை இனியும் ஏமாற்ற முயற்சிக்க வேண்டாம். உலக நாடுகளுக்கிடையில் இலங்கையை மேலும் அபகீர்த்திக்கு தள்ள வேண்டாம் என தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.