சர்வதேச நாணய நிதியத்தினூடாக வழங்கப்படவுள்ள கடனுதவி தொடர்பாக பணியாளர் மட்ட உடன்பாடுகளை எட்டுவதற்காக நிதியத்தின் (IMF) பிரதிநிதிகள் குழுவொன்று எதிர்வரும் 20ஆம் திகதி இலங்கை வரவுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவப் பணிப்பாளர் கிரிஸ்டலினா ஜோர்ஜியாவை, பிரதமர் கடந்த 07ஆம் திகதி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பணியாளர் மட்டக் குழுவொன்றை விரைவில் இலங்கைக்கு அனுப்புமாறு கோரிக்கை விடுத்திருந்தார். சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு உதவ தயாராக இருப்பதாக முகாமைத்துவப் பணிப்பாளர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அந்த சந்தர்ப்பத்தில் தெரிவித்துள்ளார்.

பிரதமரின் கோரிக்கைக்கு அமைவாக பணியாளர் மட்டத்திலான குழுவொன்று எதிர்வரும் 20ஆம் திகதி இலங்கை வரவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர் மட்டத்துக்குமிடையிலான உடன்படிக்கைகளை பொறுத்தே கடனுக்கான மேலதிக பணிகள் அமையுமெனவும், பிரதிநிதிகள் குழு சுமார் ஒரு வார காலம் இலங்கையில் தங்கியிருந்து கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Thinakaran

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.