ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (11) நாட்டை விட்டு வெளியேறியதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன உறுதிப்படுத்தியுள்ளார்.

இன்று இடம்பெற்ற விசேட நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் சபாநாயகர் இதனைத் தெரிவித்ததுடன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தம்முடன் தொடர்ந்தும் தொடர்பில் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கடந்த 9ஆம் திகதி கொழும்பு போராட்ட களத்தில் இருந்த மக்கள் ஜனாதிபதி மாளிகையையும் ஜனாதிபதி செயலகத்தையும் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர்.

இதேவேளை, கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இருந்து வெளியேறிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் பசில் ராஜபக்ஷவும் திருகோணமலை கடற்படைத் தளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

நேற்றிரவு கடல் மார்க்கமாக திருகோணமலை சென்ற ஜனாதிபதி கோட்டாபயவும் பசில் ராஜபக்ஷவும் நேற்றுக் காலை கடற்படைத் தளத்திற்குள் பிரவேசித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.