பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ள ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தலில் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 140 இற்கும் அதிகமான வாக்குகளைப் பெறுவார் என்று முன்னாள் அமைச்சரும் ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளருமான வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தான் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன உள்ளிட்ட ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாடல்களை முன்னெடுத்து வருகிறேன். ரணில் அதிக  வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவதுடன் சகலரதும் ஆசிர்வாதத்துடன் பதவியேற்பார்.

இல்லாவிடின் இறுதி தருணத்தில் எவ்வித  வாத விவாதங்களும்  இல்லாமல் அவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படலாம்.

 அவ்வாறு ரணில் விக்கிரமசிங்க  இலங்கையின் 9ஆவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் இலங்கையை ஆசியாவின் அதி சிறந்த நாடாக மாற்றுவார். உலக நாடுகளில் சிறந்த நாடாகவும் மாற்றுவார்.

ஏனெனில் அரசியலில் 50 வருடம் அனுபவம் உள்ள தலைவர். அவர் மீது எவ்வித அவநம்பிக்கையும் பீதியும் கொள்ள கூடாது என்றார்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.