இலங்கையின் 7 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்சவால் அனுப்பட்ட பதவி விலகல் கடிதம்,  ஜுலை 14 ஆம் திகதி தனக்கு கிடைக்கப்பெற்றது என்று சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தன இன்று (15) அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.


எனவே, புதிய ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான – அரசியலமைப்பின் பிரகாரமான ஏற்பாடுகள் தற்போதிலிருந்து ஆரம்பமாகும் எனவும்,  அந்த நடவடிக்கை நிறைவுபெறும்வரை ஜனாதிபதி பதவிக்குரிய அதிகாரம், பொறுப்புகளை செயற்படுத்துபவராக பிரதமர் செயற்படுவார் எனவும் கூறினார்.


புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும் நடவடிக்கையை எதிர்வரும் 7 நாட்களுக்குள் நிறைவு செய்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்த சபாநாயகர்,  இதற்கமைய நாளை தினம் (16) நாடாளுமன்றம் கூடும் எனவும்,  கூட்டத்தொடரில் அனைத்து எம்.பிக்களையும் பங்கேற்குமாறும் அழைப்பு விடுத்தார்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.