முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக மக்கள் போராட்டத்தை ஆரம்பித்த கறுப்புத் தொப்பி இயக்கம்(Black Cap Movement), காலி முகத்திடலுக்கான தனது பங்களிப்பை நேற்று(28) முதல் உத்தியோகபூர்வமாக நிறைவு செய்துள்ளது.

கோட்டாபய ராஜபக்சவின் இராஜினாமாவைத் தொடர்ந்து, காலிமுகத்திடல் போராட்டத் தளத்தை ஆக்கிரமிப்பு செய்வதில் எந்தக் காரணமும் இல்லை என அந்த இயக்கம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

கறுப்பு தொப்பி இயக்கம் ‘அரகலய 4.0’, இது எமது எதிர்ப்பின் அடுத்த கட்டமாகும் என அறிவித்துள்ளது. இது ‘காலி முகத் திடலுக்கு அப்பால்’ பிரகடனத்தில் சேர்க்கப்பட்டுள்ள சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது' எனத் தெரிவித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான திறமையற்ற ஆட்சிக்கு பதிலளிக்கும் வகையில் 2022 ஆம் ஆண்டு மார்ச் 1 ஆம் திகதி கொழும்பு,கொஹுவல சந்தியில் மெழுகுவர்த்தி ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தை இந்த இயக்கம் ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.