இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காவது நாள் ஆட்ட நிறைவில் இரண்டாவது இன்னிங்சை ஆடி வரும் பாகிஸ்தான் அணி 28 ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 89 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

முதலாவது இன்னிங்சில் இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடிய நிலையில் சகல விக்கெட்களையும் இழந்து 378 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 231 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது.

இரண்டாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி எட்டு விக்கெட் இழப்பிற்கு 360 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் ஆட்டத்தை நிறுத்தியமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் 508 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடி வரும் பாகிஸ்தான் அணி நாளைய இறுதி நாள் ஆட்டத்தில் 98 ஓவர்களில் 419 ஓட்டங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும். (Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.