பாராளுமன்றத்திற்கு அருகில் பொல்துவ சந்தியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது காணாமல் போன ரி56 வகை துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஜூலை 13ஆம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்த்தின் போது, இராணுவ அதிகாரி ஒருவர் தாக்கப்பட்டு அவரிடமிருந்த ரி56 வரை துப்பாக்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களால் கைப்பற்றப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

அதற்கமைய மேற்கொண்ட விசாரணைகளுக்கமைய, கடந்த சனிக்கிழமை (23) தியவன்னா ஓயவிலிருந்து குறித்த துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கடற்படை சுழியோடல் பிரிவு அதிகாரிகளால், இராஜகிரிய சமனல பாலத்திற்கு அருகில், தியவன்னா நீர்த்தேக்கத்தில், பாராளுமன்றத்தை நோக்கிய திசையில் பாலத்திற்கு கீழிருந்து குறித்த துப்பாக்கி மற்றும் அதன் வெற்று மெகசின் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பொருட்கள், வெலிக்கடை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிக்கடை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.