வசந்த முதலிகே, ஜோசப் ஸ்டாலின் 77 6 பேர் வெளிநாடு செல்வதைத் தடுக்கும் வகையில் கோட்டை நீதிவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

அண்மையில், காவல்துறை தலைமையகத்திற்கு முன்பாக சட்டவிரோதமாக பொதுமக்களை ஒன்றுகூட்டி, அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

கொழும்பு குற்றவியல் பிரிவு, நீதிமன்றில் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய கொழும்பு கோட்டை நீதிவான் திலின கமகே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இதன்படி, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், அருட்தந்தை ஜீவந்த பீரிஸ், அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே, ‘மாற்றத்திற்கான இளைஞர்கள்’ அமைப்பின் தேசிய அமைப்பாளர் லஹிரு வீரசேகர மற்றும் எரங்க குணசேகர உள்ளிட்ட 6 பேருக்கு வெளிநாடு செல்ல தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.