தேவையுடையோருக்கு வந்து பெற்றுக்கொள்ளவும் முடிந்தவர்கள் வைத்து விட்டு செல்லும் தர்மகாரியம் ஒன்றை 1999வகுப்பு சகோதரர்கள் சிலர் கஹட்டோவிட்ட கமால் நானா கடைக்கு முன்பாகவுள்ள சகோதரர் அரபாத் அவர்களின் கடையில் நாளைய தினம் ஆரம்பிக்கவுள்ளதை அந்த வகுப்பு சகோதரர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறார்கள்.

இந்த பொருளாதார நெருக்கடியின் காரணமாக கடுமையான முறையில் கஷ்டப்படும் வறிய மக்களின் துயர் துடைக்கும் நோக்கிலும் தன்மானத்தோடு வாழும் நடுத்தர மக்களின் பசியை போக்க அவர்களுக்கு உதவிடும் வகையிலும் வறுமையால் கஷ்டப்படும் யாராக இருந்தாலும் இந்த இடத்தில் வந்து தமக்கு தேவையான பொருட்களை மாத்திரம் எடுத்து செல்ல முடியும்

 எனவும் வசதிபடைத்தவர்கள் தம்மால் முடிந்த பொருட்களை அந்த இடத்தில் வைத்து தர்மம் செய்த நன்மையை பெற்றுக்கொள்ளவும் இந்த நல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

காலை 9 மணிக்கு திறக்கும் இந்த காரியாலயம் நண்பகல் 12 மணி வரையும் மீண்டும் மாலை 4மணிக்கு திறந்து இஷா தொழுகை நேரம் வரைக்கும் திறந்திருக்கும் எனவும்  1999 O/L வகுப்பை சேர்ந்த சகோதரர் ஒருவர் குறிப்பிட்டார்.

ஆகவே இலவசம் என்பதற்காக  சுயநலம் கொண்டு பொருட்களை தேவைக்கு அதிகமாக எடுத்துச்செல்லாமல் , தமது அன்றைய நாள் உணவு வேலைக்கு மாத்திரம் தேவையான உணவுப்பொருட்களை பெற்று அடுத்தவர்களது பசியையும் மனதில் கொண்டு நேர்மையாகவும் , பிறர் நலன் பேணும் வகையிலும் நடந்து கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.