ஸ்ரீலங்கா ஐக்கிய முன்னணியின் சேதன பசளை மூலம் விவசாயம் தொடர்பாகவும் விவசாயிகளுக்கு வாழ்வாதார வழங்கும் தொடர்பாகவும் கடந்த 2022/07/02 திகதி 2.00 மணி அளவில் செயலமர்வு ஒன்று சிலாவத்துறை கிராமிய  அபிவிருத்தி சங்க கட்டிடத்தில் சமூகப் பொருளாதார அபிவிருத்தி அமைப்பு மற்றும்  தம்பட்ட முசலி பெண்கள் அமைப்பின் அனுசரணையுடன் ஸ்ரீலங்கா ஐக்கிய முன்னணியின் தலைவர் சித்தீக் முஹம்மது சதீக் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா ஐக்கிய முன்னணியின் தவிசாளர் இருக்க ஜெயசிங்க  கலந்து சிறப்பித்தார். மற்றும் முசலி சமூக பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் தலைவர் ஜுனைத் முஹம்மத் ரிஸ்வி, பாலக்குளி , மரிச்சிக்கட்டி , சிலாவத்துறை,  காயாகுடி,  தம்பட்ட முசலி போன்ற தமிழ், முஸ்லிம், சிங்கள கிராமவாசிகள் கலந்து சிறப்பித்தார்கள்.

 இந்நிகழ்வில் சேதன பசளை மூலம் நெற்பயிர் செய்கை மேற்கொள்வது சம்பந்தமாகவும், மந்தை வளர்ப்பு மீன்பிடி கைத்தொழில் சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட்டது. ஸ்ரீலங்கா ஐக்கிய முன்னணியின் தலைவர்  சித்தீக் முஹம்மத் சதீக் அவர்களின் கோரிக்கைக்கு அமைய நேரடி வீடியோ தொழில்நுட்ப தொலைபேசி அழைப்பின் ஊடாக பாராளுமன்ற உறுப்பினரும் பேராசிரியருமான திஸ்ஸ விதாரன பொது மக்களின் பிரச்சினைகளை கேட்டு அறிந்தார். 

மேலும் நாடளாவிய ரீதியில் அனைத்து கிராமங்களிலும் இதே போன்ற நிகழ்ச்சித் திட்டம் ஏற்பாடு செய்து சேதனை பசளை மூலம் நெற்பயிர் செய்வதற்குரிய இலவச விதை நெல், உரமானியம் போன்றவற்றை பெற்றுத் தருவதாக மேற்படி பாராளுமன்ற உறுப்பினர் உறுதியளித்தார்.






கருத்துரையிடுக

Blogger இயக்குவது.