பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணிலுக்கு பங்களாதேஷ் பிரதமர் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில்,

இலங்கையின் ஜனாதிபதியாக பாராளுமன்றத்தில் நீங்கள் தெரிவு செய்யப்பட்டமைக்கு பங்களாதேஷ் அரசாங்கம் மற்றும் மக்கள் சார்பாகவும் எனது சார்பாகவும் நான் வாழ்த்துக்களை உங்களுக்கு தெரிவித்துக்கொள்கின்றேன்.

இலங்கையில் விரும்பிய சமாதானத்தையும் சுபீட்சத்தையும் ஏற்படுத்துவதற்கு உங்களது அனுபவம், ஞானம் மற்றும் அரசியல் புத்திசாலித்தனம் ஆகியன உறுதுணையாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். உங்கள் முயற்சிகள் வெற்றியடைய வாழ்த்துகிறேன்” 

இந்த ஆண்டு, பங்களாதேஷும் இலங்கையும் 50 வருட ஒற்றுமை மற்றும் நட்பைக் கொண்டாடுகின்றன, இது வரலாற்று இணைப்புகள், பகிரப்பட்ட மதிப்புகள் மற்றும் கலாச்சாரங்கள், பரஸ்பர மரியாதை மற்றும் பல பொதுவான தன்மைகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

இரு நாட்டு மக்களின் பரஸ்பர நலனுக்காக பலதரப்பட்ட துறைசார் ஒத்துழைப்பின் மூலம் எதிர்வரும் நாட்களில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மேலும் வலுப்பெறும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

இலங்கையுடன் ஒத்துழைப்பு மற்றும் உறவுகள் தொடரும் எனவும் அதற்காக உங்களுடன் தொடர்ந்து பணியாற்ற எதிர்பார்க்கின்றுன் என அந்த வாழ்த்துச் செய்தியில் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா குறிப்பிட்டுள்ளார்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.