இலங்கை ஐமாஅத்தே இஸ்லாமியின் அங்கத்தவர் தேசிய மாநாடு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 31) நடைபெறவுள்ளது.

நான்கு வருடங்களுக்கொரு முறை ஜமாஅத்தின் தலைவர் (அமீர்) தெரிவு நடைபெறவிருப்பதால் இம்மாநாடு முக்கியத்துவம் பெறுகிறது.

நேரடியாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருந்த நிலையில் நாட்டில் ஏற்பட்ட எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அங்கத்தவர்களின் போக்குவரத்துக்கு தடை ஏற்படும் என்பதால் நாட்டில் ஆங்காங்கேயுள்ள தெரிவு செய்யப்பட்ட 30 நிலையங்களில் அங்கத்தவரகள் கூடி தலைமையகத்தில் இருந்து நெறிப்படுத்தப்படும் மாநாட்டில் பங்குபற்றுவார்கள்.

இம்மாநாட்டின் போது தலைவர் (அமீர்) தேர்வுக்கான தேர்தல் நேரடி வாக்களிப்பின் மூலம் நடைபெறும். ஜமாஅத்தின் யாப்புக்கமைய நான்கு வருடங்களுக்கு ஒரு முறை தலைவர் (அமீர்) தெரிவு செய்யப்படுவார்.

அவ்வாறான தெரிவு குறிப்பிட்ட வருடத்தின் முஹர்ரம் மாதத்தில் நடைபெற வேண்டும். அந்த வகையிலே ஜூலை 31ம் திகதி மொத்த அங்கத்தவர்களும் பங்கு பற்றும் இத்தேசிய மாநாடு சூம் (Zoom) தொழிநுட்பத்தின் நடைபெறுவதாக ஜமாஅத்தே இஸ்லாமியின் உதவிப் பொதுச் செயலாளர் எம்.எச்.எம் ஹஸன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

நன்றி : விடியல் 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.