சஜித் விலகல் : ரணில், டலஸ், அநுர போட்டி

Rihmy Hakeem
By -
0

 

ஜனாதிபதி பதவிக்காக பாராளுமன்றத்தில் இருந்து ஒருவரை தெரிவு செய்வதற்கான வேட்புமனுத் தாக்கல் சற்று முன்னர் பாராளுமன்றத்தில் நிறைவடைந்துள்ளது.

அதற்கமைவாக, ஜனாதிபதி வேட்பாளராக டலஸ் அழகப்பெருமவின் பெயரை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்மொழிந்த நிலையில் அதனை ஜீ.எல்.பீரிஸ் வழிமொழிந்தார்.

மேலும், ரணில் விக்ரமசிங்கவின் பெயரை தினேஸ் குணவர்தன முன்மொழிந்த நிலையில் அதனை மனுஷ நாணயக்கார வழிமொழிந்தார்.

மேலும், அனுர குமார திசாநாயக்கவின் பெயரை விஜித ஹேரத் முன்மொழிந்ததுடன், அதனை ஹரிணி அமரசூரிய வழிமொழிந்தார்.

அத்துடன், பாராளுமன்ற அமர்வுகள் மீண்டும் நாளை காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகும் என சபாநாயகர் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)