பாதுகாப்புத் தரப்பினரின் ஆலோசனைக்கு அமையவே, ஊரடங்கு மற்றும் அவசரகால சட்டத்தை அமுல்படுத்துவதற்கு உத்தரவிட்டேன் : பதில் ஜனாதிபதி பிரதமர் ரணில் விக்ரமசிங்க

  Fayasa Fasil
By -
0

பாதுகாப்புத் தரப்பினரின் ஆலோசனைக்கு அமையவே, தான் ஊரடங்கு மற்றும் அவசரகால சட்டத்தை அமுல்படுத்துவதற்கு உத்தரவிட்டதாக, பதில் ஜனாதிபதி பிரதமர் ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் தெரிவித்துள்ளார்.

விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டு அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சில நபர்கள், தமக்குத் தேவையான ஒருவரை ஜனாதிபதியாக நியமிக்கும் நோக்கிலேயே, பிரதமர் அலுவலகத்தை சிலர் முற்றுகையிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அத்துடன் அமைதியை பேணுமாறு பொதுமக்களிடம் பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)