இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச “தனிப்பட்ட பயணம்” முறையில் சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டார் என்பதை சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்துகிறது.

அங்கு ஊடகங்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக, "கோட்டாபய ராஜபக்ச தனிப்பட்ட பயணமாக சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டார் என்பது உறுதி செய்யப்பட்டது.

அவர் புகலிடம் கோரவில்லை, அவருக்கு எந்த அடைக்கலமும் வழங்கப்படவும் இல்லை. சிங்கப்பூர் பொதுவாக புகலிடம் வழங்குவதில்லை" எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

யாழ் நியூஸ்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.