கொழும்பில் உள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லம், பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லம், அலரிமாளிகை மற்றும் பிரதமர் அலுவலகம் ஆகியவற்றிலிருந்து அமைதியான முறையில் வெளியேறவுள்ளதாக கோட்டகோகம எதிர்ப்புப் பிரச்சாரத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் செயற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், காலி முகத்திடலை தொடர்ந்தும் ஆக்கிரமித்து போராட்டத்தை முன்னெடுப்போம் என இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட செயற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை அமைதியான முறையில் போராட்டம் தொடரும் என கோட்டகோகம போராட்ட செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.