பிரபல நடிகர் அர்ஜுனின் தாயார் லட்சுமி தேவம்மா இன்று காலமானார். அவருக்கு வயது 84.

1984 முதல் தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறார் அர்ஜுன். அவர் நடித்த ஹீரோ, பிரெண்ட்ஷிப் ஆகிய படங்கள் சமீபத்தில் வெளிவந்தன.

அர்ஜுனின் தாயார் லட்சுமி தேவம்மா உடல்நலக்குறைவால் இன்று காலமானார். சமீபகாலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த லட்சுமி, பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். அவருக்கு இரு மகன்களும் ஒரு மகளும் உள்ளார்கள்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.