இலங்கை கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான பெத்தும் நிஸ்ஸங்க கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்.

அவுஸ்திரேலியா – இலங்கை அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடிவரும் நிலையில் அவருக்கு கொவிட்-19 வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.

இதன் காரணமாக அவர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

எவ்வாறாயினும், பெத்தும் நிஸ்ஸங்கவுக்காக, ஓஷத பெர்னாண்டோ அணிக்கு அழைக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் மேலும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ள இலங்கை அணியில், கொவிட்-19 தொற்றுக்கு உள்ளான வீரர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.

எவ்வாறாயினும், கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகி குணமடைந்த, ஏஞ்சலோ மெத்யூஸ் தற்போது அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.