முன்னாள் நிதியமைச்சர்களான மகிந்த ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோர் நீதிமன்ற அனுமதியின்றி வெளிநாடு செல்வதற்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

எதிர்வரும் 28 ஆம் திகதி வரை அமுலாகும் வகையில் இந்த இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்களுக்கு எதிராக விசாரணை நடத்துமாறு கோரிய மனு தொடர்பான நகர்த்தல் பத்திரம் இன்று(15) உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, புவனேக அலுவிஹாரே, பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட மற்றும் எல்.டி.பி தெஹிதெனிய ஆகிய ஐவரடங்கிய உயர் நீதியரசர்கள் ஆயம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.