கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் எடுக்கப்படும் எந்தவொரு தீர்மானத்தையும் தான் மதிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்துள்ளார் என, பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு பிரதமர் ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி பதவியிலிருந்து உடனடியாக விலகுமாறு கோட்டாபாயவிடம் கோருவதென்று சற்று முன்னர் கூடிய கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரணமான நிலைமையினைத் தொடர்ந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கோரிக்கைக்கு அமைய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் தலைமையில் அவசர கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம்பெற்ற போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.