மூன்றாவது லங்கா பிறீமியர் லீக் இருபதுக்கு 20 தொடர் உடன் அமுலுக்கு வரும் வகையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.

முன்னதாக ஒகஸ்ட் முதலாம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை லங்கா பிறீமியர் லீக் இருபதுக்கு 20 தொடரை நடாத்த தீர்மானிக்கப்பட்டிருந்தது.

எனினும், தொடரின் உரிமைத்துவ நிறுவமான Innovative Production Group நிறுவனம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய அதனை ஒத்தி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது காணப்படும் பொருளாதார சூழ்நிலை போட்டியை நடத்துவதற்கு ஏற்றதாக இல்லை என Innovative Production Group நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளதாக ஶ்ரீலங்கா கிரிக்கெட் குறிப்பிட்டுள்ளது. 


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.