(ஊடக விளங்கறிவு மையம்(Cmil) நடாத்திய Reform watch நிகழ்ச்சியின் Expert talk இல் முஸ்லிம் கவுன்சில் ஆஃப் சிறிலங்காவின் மத்திய குழு உறுப்பினர் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர் முஹம்மத் ஹிசாம் அவர்கள் தெரிவித்த கருத்துக்களின் தொகுப்பு.)

இலங்கையின் அரசியல் என்பது சர்வதேசமே திரும்பிப் பார்க்கும் அளவிற்கு இன்று மாறியுள்ளது. இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட புதிய அரசியல் சாசன சீர்திருத்தத்திற்கு கடந்த 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒப்புதல் வழங்கப்பட்டது. அதன் போது 19 வது அரசியல் சட்ட திருத்த பிரேரணையின் முக்கிய அம்சங்களாக,

 இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறை அகற்றப்பட்டு ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றமும் சேர்ந்து நிர்வகிக்கும் ஆட்சி முறை இலங்கையில் வரும், அனைத்து தேர்தலிலும் விகிதாசார முறை நீக்கப்பட்டு ஒவ்வொரு தொகுதியிலும் யார் அதிக வாக்குகளை பெறுகிறாரோ அவர் வெற்றி பெற்றவர் என்ற முறை அமுலாகும், ஒருவர் அதிகபட்சமாக இரண்டு முறை மாத்திரமே ஜனாதிபதியாக இருக்க முடியும், ஜனாதிபதியின் ஒரு ஆட்சிக்காலம் என்பது ஆறு ஆண்டுகளிலிருந்து ஐந்து ஆண்டுகளாக குறைக்கப்படும், நாடாளுமன்றம் தெரிவு செய்யப்பட்டு ஓராண்டு கடந்துவிட்ட பின்னர் அதனை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்காது, ஒரு நாடாளுமன்றம் தேர்ந்தெடுக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் கடந்து விட்ட பின்னர் தான் அதனை கலைக்கும் உரிமை மறுபடியும் ஜனாதிபதிக்கு வரும், ஒருவர் ஜனாதிபதியாக இருக்கும் போது அவர் உத்தியோபூர்வமாக செய்யும் காரியங்களை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பதற்கு இருந்து வருகின்ற சட்ட தடை அகற்றப்படும், இலங்கையில் அதிகபட்சமாக 30 பேரை (கபினட்) அமைச்சரவையில் அந்தஸ்துடைய அமைச்சராகவும், அதிகபட்சமாக 40 பேரை துணை அமைச்சர்களாகவும் என மொத்தம் 70 பேரை அமைச்சராக இருக்க முடியும் என்ற வரம்புள்ளது.17ஆம் அரசியல் சட்ட திருத்தம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் நாட்டின் ஆணைக்குழுக்கள் ஜனாதிபதியால் அல்லாமல் சுயாதீனமான முறையில் மீண்டும் தேர்வு செய்யப்பட வேண்டும், அமைச்சரவையின் தலைவராகவும், முப்படைகளின் தலைமைத் தளபதியாகவும் தொடர்ந்தும் ஜனாதிபதியே விளங்குவார், பிரதமரையும், அமைச்சர்களையும் நியமிக்கும் அதிகாரம் தொடர்ந்து ஜனாதிபதிக்கு இருக்கும் என்றவாறே வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தது.

கோட்டாபயவின் தவறான நிர்வாகம், அவருக்கு எதிராக மக்களை அணி திரட்டியதோடு , நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிப்புக்கான ஆதரவையும் கொடுத்துள்ளது.கடந்த பல ஜனாதிபதித் தேர்தல்களில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவி ஒழிப்பு என்பது மிக முக்கியமான வாக்குறுதியாக கருதப்பட்டு முன்வைக்கப்பட்டாலும் அந்த வாக்குறுதியை கொடுத்தவர்கள் அதனை அனுபவிப்பதில் அல்லது அதிகாரங்களை வலுப்படுத்துவதிலேயே கவனம் செலுத்தினார்கள். நல்லாட்சி அரசின் ஜனாதிபதியான மைத்திரிபால மாத்திரமே இதில் அதிகாரத்தை குறைத்துக் கொள்ள அனுமதி வழங்கினார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அந்த அதிகாரங்களை அவ்வாறே அனுபவிக்க குறியாக இருந்தார். மஹிந்தவும் ,கோட்டாவும் தங்களின் அதிகாரங்களை வரையறை இன்று அதிகரிப்பதில் கண் செலுத்தினார்கள். இதனாலேயே இவர்கள் நிறைவேற்று அதிகாரத்தில் தலையாக இருந்த ஜே .ஆர் யை விடவும் அதிகாரத்தை பெற்றனர். இதுவே ஆபத்தாக மாறியது எனலாம்.

எனவே புதிய அரசியலமைப்பில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையில் மாற்றங்கள் கொண்டு வர வேண்டும் என்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.தமிழ் தேசிய கூட்டமைப்பானது நிறைவேற்று அதிகார முறையை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது. எனினும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் உறுப்பினரான சி. வி விக்னேஸ்வரன் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை சிறுபான்மையினரின் பாதுகாப்புக்கு அவசியம் என்பதை கூறியுள்ளார். எனவே இந்த விடயங்கள் தமிழ் தரப்பில் முரண்பாடாக உள்ளது. இந் நிலையில் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமை யின் அதிகாரங்களை குறைத்து மீண்டும் 19-வது திருத்தத்தை கொண்டு வருவதற்கான ஆலோசனைகள் கடந்த வாரங்களில் எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்பட்டது. 44 வருடங்களாக இந்த நாட்டில் கடும் விமர்சனங்களையும், எதிர்ப்புகளையும் சம்பாதித்துக் கொண்டிருக்கின்ற நிறைவேற்ற அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை மாற்றி அமைப்பதற்கு தற்போது ஒரு சிறந்த அரசியல் ரீதியான சந்தர்ப்பமாகவே உள்ளது. எனினும் அரசியல் ரீதியாக ஒன்றிணைந்து சகலரும் இந்த இலக்கை அடைவார்கள் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

மக்கள் எழுச்சி போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு 100 நாட்களைக் கடக்கவில்லை என்றாலும் பாரிய அரசியல் திருப்புங்கள் ஏற்பட்டுள்ளது அதாவது முழு அமைச்சரவையும் பதவி விலகியமே சகல கட்சிகளையும் உள்ளடக்கிய இடைக்கால அரசாங்கம் அமைக்க கோத்தாவை அழைப்பு விடுத்தமே மஹிந்த மற்றும் பெசிலாகியோர் பதவி துறந்தமே இளம்பிறது நிதிகள் கொண்ட அமைச்சரவை நியமனம் அரசியலமைப்பு சீர்திருத்தற்கு அறிவித்தல் 19வது திருத்தச் சட்டத்தை கொண்டு வருவதற்கான நடவடிக்கை போராட்டம் சூடு பிடித்தமே ஜனாதிபதி செயலகம் கைப்பற்றப்பட்டது பிரதமர் பிரத்தியே வீடு தீக்கிரையானது பிரதமர் செயலகம் கைப்பற்றப்பட்டது தேசிய ரோபோ அணி போராட்டக்காரர்கள் கைப்பற்றப்பட்டது பதவி விலகியமே பதில் ஜனாதிபதியாக ரணில் விக்ரம் சிங்கப்ப பதவி ஏற்றுள்ளமை ஜூலை 20ஆம் தேதி நாடாளுமன்றத்தில் இடைக்கால ஜனாதிபதி தேர்வு வாக்கு என்பன பல்வேறு அரசியல் மாற்றங்களையும் இந்த மக்கள் எழுச்சி போராட்டங்கள் மூலம் ஏற்பட்ட பாரிய மாற்றங்களாக உள்ளது.

தற்போது நாட்டில் 20 ஆவது சீர்திருத்தத்தினூடாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை தான் இருக்கின்றது .இது பற்றி நேர் கருத்துக்களும், மறையான கருத்துக்களும் இருக்கின்றது. கடந்த கால சம்பவங்களை வைத்து பார்த்தோமேயானால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையினால் அதிக பாதகங்கள் ஏற்பட்டுள்ளது.கோட்டாபய துரத்தியடிக்கப்பட்ட பின்  ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றுள்ளார்.   அரசியல் மாற்றத்தை எதிர்பார்க்கின்ற மக்களுக்கு 19வது அரசியலமைப்பு திருத்தத்தை மீண்டும் அமுல்படுத்ததற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அதற்காக முதற்கட்ட நடவடிக்கைகளை செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். எனவே இதன் அடுத்த கட்டம் எவ்வாறு அமையப் போகின்றது என்பது அனைவரினதும் எதிர்பார்ப்பாகும். என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.